News October 26, 2025
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக். 25) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக். 26) முதல் முட்டையின் விலை ரூ.5.25 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Similar News
News October 28, 2025
நாமக்கல்: கொட்டிக்கிடைக்கும் வேலைகள்

1) ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் வேலை (ongcindia.com)
2) உளவுத்துறையில் வேலை (mha.gov.in)
3) ரயில் நிறுவனத்தில் வேலை ( irctc.com)
4)பெல் நிறுவனத்தில் வேலை (bel-india.in)
5) யூகே வங்கியில் வேலை (uco.bank.in)
6) இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை (sac.gov.in)
7) ராணுவத்தில் 1426 பேருக்கு வேலை (territorialarmy.in)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)
News October 28, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கல்: பெங்களூரூ, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சாஃபர் ரயிலில் வருகிற அக்.31ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு ’3 tier AC’ பெட்டி இணைத்து இயக்கப்படவுள்ளது. இந்த 22497 திருச்சி ஹம்சாஃபர் ரயில் நாமக்கல் வழியாக நாளை (அக்.29) புதன் இரவு 07:45க்கு செல்லும். பயணிகள் பயன்படுத்திக்கொள்ளவும்.
News October 28, 2025
நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து உயரும் முட்டை விலை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள் முதல் விலை 530 காசுகளாக இருந்து வந்த நிலையில நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 535 காசுகளாக அதிகரித்து உள்ளது.
கறிக்கோழி கிலோ ரூ.101-க் கும், முட்டைக்கோழி கிலோ ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை


