News October 26, 2025
சேலத்தில் 12 மருத்துவ முகாம்கள்: 17,593 பேர் பலன்

சேலம் மாவட்டத்தில் இதுவரை தமிழக அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்கள் 12 நடத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, 7,944 ஆண்கள், 10,410 பெண்கள் என மொத்தம் 17,593 பயனாளிகள் கலந்து கொண்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் இலவச பரிசோதனையுடன் மருந்து பொருட்களும் வழங்கப்பட்டன.
Similar News
News October 28, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News October 27, 2025
சேலம்: புனித பயணம் மேற்கொள்ள மானியம்!

சேலம் மாவட்டத்திலிருந்து நாக்பூரில் நடைபெறும் தம்ம சக்கர பரிவர்த்தன திருவிழாவிற்கு பங்கேற்கச் செல்ல விருப்பமுள்ளவர்கள் பௌத்த சமயத்தினருக்கு www.bcmbcmz.tn.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து நேரடியாக ரூ.5000 மானியம் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். நவ.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 27, 2025
சேலம்: நாளை நடைபெறும் முகாம்கள் குறித்த விவரம்!

சேலத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் (அக்.28) நடைபெறும் இடங்கள்;
1) பாப்பம்பாடி சுய உதவிக் குழு கட்டிடம் பாப்பம்பாடி.
2)ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ராணிப்பேட்டை.
3)தேவூர் பேரூராட்சி அலுவலகம் தேவூர்.
4) மேச்சேரி தனலட்சுமி மஹால் கந்தனூர்.
5)பெத்தநாயக்கன்பாளையம் லட்சுமி திருமண மஹால் கருமந்துறை.
6) தலைவாசல் மகாலட்சுமி திருமண மண்டபம் நாவலூர்.


