News October 26, 2025
தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

மதுரை ஆனையூரை சேர்ந்தவர் திருமூர்த்தி(27). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவரது தாயார் சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து போனார். அது முதல் மன உளைச்சலில் இருந்து வந்த திருமூர்த்தி இன்று தனது பாட்டி வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News October 28, 2025
கப்பலூரில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

திருமங்கலம் கப்பலூர் பாலமுருகன். திண்டுக்கல் பள்ளப்பட்டி சிட்கோவில் வேலை செய்கிறார். அவரது மனைவி சுகுமாரி கப்பலூர் சிட்கோவில் வேலை செய்கிறார். இரு நாட்களுக்கு முன்பு பாலமுருகன், சுகுமாரி வேலைக்கு சென்ற பின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 5.5 பவுன் நகை ரூ 45 ஆயிரத்தை திருடி சென்றனர் போலீசார் விசாரிக்கினர்.
News October 28, 2025
போலீஸ் குறைகள் 5 நாளில் தீர்வு

மதுரை நகர் போலீசாருக்கு ‘அகம் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தங்களது ஊதிய உயர்வு, ஊதிய முரண்பாடு, வீட்டு வாடகை படி உள்ளிட்ட குறைகள் இருப்பின் வாட்ஸ் ஆப் எண்ணில் 94981 81313 புகார் செய்யலாம். அடுத்த 5 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். என மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளார்.
News October 28, 2025
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (27.10.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.


