News October 26, 2025
Women’s CWC: மீண்டும் இந்தியா Vs ஆஸ்திரேலியா மோதல்

Women’s CWC, 2-வது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதுவது உறுதியாகியுள்ளது. நடப்பு தொடரில் தோல்வியே தழுவாத ஆஸி., புள்ளி பட்டியலில் 13 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்தியா 4-வது இடத்திலும் உள்ளன. அதன்படி, வரும் 30-ம் தேதி நவி மும்பை மைதானத்தில் நடக்கும் அரையிறுதியில் ஆஸி., இந்தியா அணிகள் மோதுகின்றன. ஏற்கெனவே, குரூப் ஸ்டேஜில் இந்தியா நிர்ணயித்த 331 ரன்கள் இலக்கை ஆஸி., சேஸ் செய்திருந்தது.
Similar News
News October 26, 2025
வேற மாறி.. வேற மாறி.. Global Star-ஐ இயக்கும் நெல்சன்

ஜெயிலர் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு, தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராகிவிட்ட நெல்சன், ஜெயிலர் 2-வில் பிஸியாக உள்ளார். இப்படத்தை தொடர்ந்து அவர், ரஜினி- கமல் படத்தை இயக்குவார் எனக் கூறப்படும் நிலையில், மற்றொரு செய்தியும் கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. நடிகர் ராம் சரணுடன் நெல்சன் இணையவுள்ளார் என்றும், இந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பார் எனவும் கூறப்படுகிறது.
News October 26, 2025
150 டிகிரிகள்.. பட்டங்களின் களஞ்சியமான சென்னை நபர்!

150 டிகிரிகளை முடித்துள்ள சென்னையை சேர்ந்த பேராசிரியர் VN பார்த்திபன் ‘பட்டங்களின் களஞ்சியம்’ என போற்றப்படுகிறார். தனது முதல் பட்டப்படிப்பில் ஜஸ்ட் பாஸானதை அடுத்து, தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தின் பேரில் 1981-ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை அயராமல் படித்து வருகிறார். MA, MCom, MSc, ML, MPhil, MBA உள்ளிட்ட பல பட்டங்களை வாங்கியுள்ளவர், 200 பட்டங்களை பெறுவதே தனது இலக்கு என்கிறார்.
News October 26, 2025
முதல்வருக்கு படம் பார்க்க மட்டும் நேரம் இருக்கிறதா? EPS

நெல் மணிகளை பிடித்திருக்க வேண்டிய முதல்வரின் கைகள், படக்குழுவினரின் கைகளை பற்றியுள்ளதாக EPS விமர்சித்துள்ளார். பைசன் படக்குழுவை CM பாராட்டியதை சுட்டிக்காட்டிய அவர், படம் பார்த்து பாராட்ட நேரம் இருக்கும் முதல்வருக்கு விவசாயிகளின் வேதனையை கேட்க நேரம் இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மழையில் நனைந்து முளைத்த நெல்லை பிடித்த போது, விவசாயிகளின் வேதனையை உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


