News October 25, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்-25) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Similar News

News February 12, 2026

பேருந்து நிலையத்தினை ஆட்சியர் ஆய்வு

image

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை பிற்பகல் சுமார் 1 மணி அளவில் ஆட்சியர் ரெ.சதீஸ் இன்று (பிப்.12) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் நகர் நல அலுவலர் இலட்ஷியவர்ணா, துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், சுசீந்திரன் உள்ளிட்ட அரசுத்துறை தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

News February 12, 2026

தருமபுரி: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு..!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதனை பெற உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க.

News February 12, 2026

தருமபுரியில் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

தருமபுரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். SHARE IT!

error: Content is protected !!