News October 25, 2025
தமிழ் நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்: திரையுலகில் சோகம்

சமீப காலமாக தமிழ் திரைத்துறை பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளது. குறுகிய காலத்தில் பல பிரபல சினிமா நட்சத்திரங்கள் பிரிந்துவிட்டனர். தமிழ் சினிமா இவர்களை என்றும் நினைவில் வைத்திருக்கும். இவர்களது நகைச்சுவை, இசை, திரைப்படங்கள் ஆகியவை எப்போதும் நம் இதயங்களில் உயிர் வாழும். யாரெல்லாம் மறைந்தனர் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
Similar News
News October 28, 2025
மக்கள் நாயகன் காலமானார்

தென் மாவட்டங்களில் ‘மக்கள் நாயகன்’ என அன்போடு அழைக்கப்பட்ட பிரபல டாக்டர் ராஜசேகர் (எ) கண்ணன்(65) உடல் நலக்குறைவால் காலமானார். ராஜபாளையம் டவுனில் கிளினிக் வைத்திருந்த இவர், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய மக்களிடம் ₹10, ₹20, அதிகபட்சமாக ₹50 மட்டுமே பீஸ் வாங்கி கொண்டு சிகிச்சை பார்த்தவர். கொரோனா காலத்தில் பல உயிர்களை காத்த இவருக்கு பல்வேறு தனியார் அமைப்புகள் விருது வழங்கி கவுரவித்துள்ளன.
News October 28, 2025
விஷ்ணு விஷாலின் நிறைவேறாத ஆசை

நடிகர் விஷ்ணு விஷால் ‘ஆர்யன்’ பட புரமோஷனில் பிஸியாக உள்ளார். இதனிடையே பேட்டி ஒன்றில் தனது நிறைவேறாத ஆசையைப் பற்றி மனம் திறந்துள்ளார். தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ படத்தை இயக்க வேண்டும் என்று விஷ்ணு விஷால் ஆசைப்பட்டதாகவும், ஆனால் அதற்கு முன் மின்னல் முரளி, லோகா உள்ளிட்ட மலையாளப் படங்கள் வெளியாகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
News October 28, 2025
துணை ஜனாதிபதியாக சொந்த மண்ணில் கால்பதித்த CPR

துணை ஜனாதிபதியாக தேர்வான பிறகு முதல்முறையாக தனது சொந்த மண்ணான கோவைக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் சென்றுள்ளார். கோவை விமான நிலையத்தில் அமைச்சர்கள் சாமிநாதன், முத்துசாமி ஆகியோர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், வியாழன் அன்று தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்கிறார். அன்றைய தினமே மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.


