News October 25, 2025
இந்தியா Vs பாக்.: எல்லையில் இரு ராணுவங்களும் பயிற்சி

பாக்., எல்லை அருகே சர் கிரீக் பகுதியில் வரும் 30-ம் தேதி முதல் நவ.10 வரை முப்படைகள் பயிற்சி நடத்த உள்ளன. சர் கிரீக் பகுதியில் பாக்., ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்துவதாக கூறப்படும் நிலையில், இந்தியா பயிற்சி மேற்கொள்ள உள்ளது. ஆனால், அதற்கு முன்பாக வரும் 28, 29-ம் தேதிகளில் பாக்., தனது வான்வெளியில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், அந்நாடு பயிற்சி (அ) ஆயுத சோதனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 16, 2026
மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்

உழவுத் தொழிலில் விவசாயிகளுக்கு துணைநிற்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில், காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் 2.30 மணிக்குள்ளும் பொங்கல் வைக்கலாம். மேலும், அந்த பொங்கலை மாட்டிற்கு கொடுத்து வழிபாடு செய்வது சிறப்பு. வீட்டில் மாடுகள் இல்லாதவர்கள் சிவன் கோவிலுக்கு சென்று நந்தி பகவானை வழிபடலாம்.
News January 16, 2026
தேர்தல் வரும்போது மட்டும் தமிழர்கள் நினைப்பு: கனிமொழி

பொங்கலை முன்னிட்டு PM மோடியும், அமித்ஷாவும் நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தேர்தல் வரும்போது மட்டும் தமிழர்களை பற்றியும், தமிழ் பண்டிகைகளை பற்றியும் மத்திய அரசுக்கு நினைவு வருவதாக கனிமொழி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க நினைப்பவர்களைத் தமிழர்கள் நம்பி ஏமாறத் தயாராக இல்லை எனவும், அவர்களை பற்றி பேசுவதில் பயனில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 16, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 16, தை 2 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 1:30 PM – 2:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.


