News October 25, 2025

BREAKING: கனமழை.. அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு

image

புயல் உருவாவதன் எதிரொலியாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மருந்து பொருள்களை கையிருப்பில் வைக்க அனைத்து மாவட்ட ஹாஸ்பிடல்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பாரசிட்டமால், குளுக்கோஸ், உப்பு கரைசல் உள்ளிட்டவை தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காய்ச்சல் அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Similar News

News January 18, 2026

இளைஞர்களை தனிமைப்படுத்தும் friendflation!

image

நாட்டின் பணவீக்கம் இளைஞர்களை தனிமையில் வாட்டுவதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. விலை உயர்ந்து கொண்டே போகும் ஹோட்டல் பில், தியேட்டர் டிக்கெட்கள், பெட்ரோல் விலை போன்றவற்றுக்கு பயந்து மெட்ரோ நகரங்களின் யூத்ஸ், நண்பர்களுடன் வெளியில் செல்வதையே தவிர்க்கிறார்களாம். யாராவது அழைத்தாலும், வேண்டாம் என கூறிவிடுகிறார்களாம். இது friendflation என குறிப்பிடப்படுகிறது. ​​இதுகுறித்து, நீங்க என்ன சொல்றீங்க?

News January 18, 2026

NDA கூட்டணியில் தேமுதிக, அமமுகவா? நயினார் விளக்கம்

image

ஜன.23, மதுராந்தகத்தில் நடைபெறும் பாஜக கூட்டத்தில், NDA-வின் பிரமாண்ட தேர்தல் பிரச்சாரத்தை PM மோடி தொடங்கி வைக்க உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ‘திமுகவை வீட்டிற்கு அனுப்புங்கள்’ என்ற முழக்கத்துடன் PM மோடி தனது பிரசார உரையை ஆற்றுவார் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அமமுக, தேமுதிக கூட்டணியில் உள்ளதா? இல்லையா? என்பதற்கான விடையும் அதேநாளில் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News January 18, 2026

நான் இருப்பதே திமுகவுக்கு மறந்துபோச்சு: சசிகலா

image

MGR-ஜெயலலிதா ஆட்சி மட்டும் தான் உண்மையான மக்களாட்சி என சசிகலா தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில், திமுக ஆட்சியில் வெறுமென பேச்சில் மட்டுமே மக்களாட்சி இருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை எதிரிகளே இல்லையென திமுக நினைப்பதாகவும், ஆனால் தான் இருப்பதையே அவர்கள் மறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். விரைவில் உண்மை நிலவரத்தை அனைவரும் பார்ப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!