News October 25, 2025
தீபாவளி சீட்டு மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார்

விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீபாவளி சீட்டு பிடித்து ரூ.2 லட்சத்துக்கும் மேல் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார். மேலும், தலைமறைவாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தங்கள் பணத்தை திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அக்.25 புகார் மனு அளித்தனர்.
Similar News
News October 28, 2025
விழுப்புரம்: PHONE தொலைந்தால் இதை பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<
News October 28, 2025
விழுப்புரம்: சுகாதார ஆய்வாளர் எடுத்த விபரீத முடிவு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த பெரியமுதலியார்சாவடி பாரதி நகரைச் சேர்ந்தவர் சரவணன் (38). விக்கிரவாண்டி பகுதியின் சுகாதார ஆய்வாளர் ஆவார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் ராஜலட்சுமி, சென்னைக்கு சென்ற நிலையில், சரவணன் தன் வீட்டில் மாலை 5:30 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News October 28, 2025
விழுப்புரம் ஆட்சியரின் அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டம், விவசாயிகள் அக்டோபர் மாத குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 31.10.2025 அன்று காலை 11.00 மணியளவில் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிகளும், விவசாயிகளும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


