News October 25, 2025
90’s கிட்ஸ் Dude திரைப்படங்கள்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி உள்ள ‘Dude’ திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது Gen Z தலைமுறையினருக்கான திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இதனால், இதேபோன்று கதை அம்சம் கொண்ட 90’s கிட்ஸ்களின் Dude திரைப்படங்கள், SM-யில் டிரெண்டாகி வருகின்றன. அவற்றை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். இதில், உங்களுக்கு பிடித்த படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News October 26, 2025
பழைய நண்பனை (BJP) விடமாட்டோம்: செம்மலை

தவெக தலைவர் விஜய், அதிமுக கூட்டணிக்குள் வந்தால், பாஜகவை இபிஎஸ் கழட்டிவிட்டு விடுவார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், புதிய நண்பனுக்காக (TVK), பழைய நண்பனை (BJP) கைவிடும் பழக்கம் அதிமுகவுக்கு இல்லை என செம்மலை தெரிவித்துள்ளார். மேலும், பேரவை தேர்தலில் அதிமுக வலுவான கூட்டணி அமைக்கும் எனக் கூறிய அவர், திமுகவுக்கு எதிரான கட்சிகள் கூட்டணிக்கு வர அழைப்பும் விடுத்துள்ளார்.
News October 26, 2025
RBI அதிரடி அறிவிப்பு.. நீங்களும் ₹40 லட்சம் வெல்லலாம்!

‘பாதுகாப்பான வங்கி- அடையாளம், நேர்மை, சமவாய்ப்பு’ என்ற கருப்பொருளில் கீழ் RBI ‘HaRBInger 2025’ ஹேக்கத்தான் போட்டியை அறிவித்துள்ளது. Tokenised KYC, Offline CBDC (Digital Currency), enhancing trust போன்றவற்றில் உள்ள சிக்கல்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும். வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசாக ₹40 லட்சமும், 2-வது பரிசாக ₹20 லட்சமும் வழங்கப்படும். யாரு இந்த போட்டிக்கு ரெடி?
News October 26, 2025
எந்த மூலிகையை வீட்டில் வளர்ப்பது முக்கியம்? இதோ…

பெரும்பான்மையான வீடுகளில் பசுமைக்காகவும், அழகுக்காகவும் செடி, கொடிகளை வளர்த்து வருகின்றனர். ஆனால் இன்று இருக்கும் சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நோய்த்தொற்று அதிகமாகி வருகிறது. அதிலும் தற்போது மழைக்காலம் வேறு வந்துவிட்டது. எனவே வீடுகளில் மூலிகைகளை வளர்ப்பது மிக முக்கியம். அவை என்னென்ன என்பதை மேலே ஸ்வைப் பண்ணி பாருங்க…


