News October 25, 2025
கடலூர்: ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

கடலூர், 12 ஆம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு தேர்வு தேர்ச்சி தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் தலைமையாசிரியர்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் இன்று (25.10.2025) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.எல்லப்பன் உட்பட பள்ளிக் கல்வித் துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் உள்ளனர்.
Similar News
News October 28, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.27) இரவு 10 மணி முதல் இன்று (அக்.26) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்!
News October 27, 2025
கடலூரில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்; ஆட்சியர் அழைப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற அக்.31ஆம் தேதி விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிதுள்ளார்.
News October 27, 2025
கடலூர் மக்களே… இனி இது அவசியம்!

கடலூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <


