News October 25, 2025
மேக்கப் போடுறீங்களா? கண்டிப்பா இத கவனிங்க

நீங்கள் போடும் மேக்கப்பை சரியாக கழுவவில்லை என்றால் அதுவே பல சரும பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். அதனை இயற்கையான முறையிலேயே அகற்ற பல வழிகள் இருக்கின்றன. மேக்கப்பை அகற்ற தேங்காய் எண்ணெய் அல்லது கிரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, கற்றாழை ஜெல், வெள்ளரிக்காய் சாறு, பாதாம் எண்ணெயை பயன்படுத்தலாம். இதனால், மென்மையான உங்கள் சருமத்தில் மேக்கப்பால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுக்க முடியும். SHARE.
Similar News
News October 28, 2025
மார்பக புற்றுநோய் பற்றிய தவறான புரிதல்கள்

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2021-ல் 12.5 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இந்த நோய்க்கான அறிகுறிகள் பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாததாலேயே இதனை முன்பே கண்டறிய நாம் தவறுகிறோம். மார்பக புற்றுநோய் குறித்த தவறான புரிதல்களும் அதன் உண்மைகளையும் தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. உயிர் காக்கும் தகவலை SHARE பண்ணுங்க.
News October 28, 2025
இனி Whatsapp-லும் Cover Photo! விரைவில் அசத்தல் அப்டேட்!

தொடர்ந்து தனது யூஸர்களை தக்கவைத்துக் கொள்ள, Whatsapp புது புது அப்டேட்களை வாரி வழங்கி வருகிறது. அப்படிதான் தற்போது, X & பேஸ்புக்கில் Cover photo வைப்பது போல, Whatsapp-லும் Cover photo வைக்கும் வசதி அறிமுகமாகவுள்ளது. முதற்கட்டமாக, Beta வெர்ஷனில் பிசினஸ் அக்கவுண்டகளுக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. விரைவில் இந்த வசதி, விரைவில் அனைத்து யூஸர்களுக்கும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
News October 28, 2025
உலகின் வயதான அதிபரானார் பால் பியா

கேமரூனில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் குளறுபடி நடந்ததாக அங்கு வன்முறை வெடித்தது. இதனால் மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில், பால் பியா 53.66% வாக்குகளையும், எதிர்த்து போட்டியிட்ட இசா சிரோமா 35.19% வாக்குகளையும் பெற்றனர். இதன்மூலம் 92 வயதில் மீண்டும் அதிபரான பால் பியா, உலகின் மிகவும் வயதான அதிபர் என்ற சாதனையையும் படைத்தார். 1984-ல் இருந்து (41 ஆண்டுகளாக) பால் பியாதான் அதிபராக உள்ளார்.


