News October 25, 2025
கவர்ச்சி காட்ட தயாராகும் கயாது

‘டிராகன்’ படத்தின் மூலம் மார்க்கெட்டில் டிமாண்ட் உள்ள நடிகையாக வலம் வந்தார் கயாது லோஹர். ஆனால், பார்ட்டி சர்ச்சைகளால் அவரது மார்க்கெட் டல் ஆனது. அடுத்து நடிக்கும் படங்களும் தள்ளிப்போனது. இதனால், கவர்ச்சி காட்ட தயாராகி வருகிறாராம். முதற்கட்டமாக கிளாமர் போட்டோஷூட், வீடியோ ஷூட் ரிலீஸ் செய்ய போகிறாராம். டாப் ஹீரோக்களுடன் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்க வேண்டும் என்பதே அவரது பிளானாம்.
Similar News
News October 28, 2025
ராணிப்பேட்டையில் பள்ளிகள் இயங்கும்.. புதிய அறிவிப்பு

ராணிப்பேட்டையில் இன்று(அக்.28) பள்ளிகள் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘மொன்தா’ புயல் எதிரொலியாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து அந்த மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொண்டு WAY2NEWS பேசியது. அப்போது, சில ஊடகங்களில் தவறான தகவல் பரவுவதாகவும், இன்று பள்ளிகள் இயங்கும் எனவும் தெரிவித்தார்.
News October 28, 2025
சர்க்கரையை கட்டுப்படுத்த இந்த கசாயம் குடிங்க!

➤இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, சர்க்கரையை கட்டுப்படுத்த வெற்றிலை கசாயம் உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ➤தேவை: வெற்றிலை, இஞ்சி, மிளகு, சீரகம், சுக்கு, ஏலக்காய், பட்டை & நாட்டுச்சர்க்கரை ➤செய்முறை: இவை அனைத்தையும் 10 முதல் 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். கொதி வந்து நல்ல மணம் வந்ததும் அதை வடிகட்டி சிறிது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். SHARE IT.
News October 28, 2025
Ro-Ko-வால் இவர மறந்துட்டாங்க: வருண்

Ro-Ko-வால் ஹர்ஷித் ராணாவின் திறமை பாராட்டை பெறவில்லை என்று முன்னாள் வீரர் வருண் ஆரோன் தெரிவித்துள்ளார். ஆஸி.,க்கு எதிரான கடைசி ODI-ல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவின் வெற்றிக்கு உண்மையில் வித்திட்டதே ஹர்ஷித் தான் என்றும் அவர் குறிப்பிட்டார். ரசிகர்களுக்கும் ரோஹித் – கோலியின் ஆட்டமே தேவைப்பட்டதாகவும், அது கடைசி ஆட்டத்தில் நன்றாகவே கிடைத்ததாகவும் கூறினார். நீங்க என்ன நினைக்கிறீங்க?


