News October 25, 2025
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு Silver Skoch விருது!

நாகப்பட்டினம் மாவட்டம், மகளிர் முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவத்திற்காக முன்னெடுக்கப்பட்ட சிறந்த முயற்சிகளுக்காக, 2025 செப்டம்பர் 20 அன்று தேசிய அளவில் நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நல அலுவலகம் இணைந்து சில்வர் ஸ்கோச் விருதை பெற்றுள்ளது. சில்வர் ஸ்கோச் விருதை பெற்று நாகை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.
Similar News
News October 28, 2025
நாகை: ரூ.30,000 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.30,000
4. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
5. கடைசி தேதி : 29.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News October 28, 2025
நாகை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஓவிய சவால்!

நாகை மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 5 நாள் ஓவிய சவால் நடைபெற உள்ளது. இதில் 5 நாள்களுக்கு 5 தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 5வது நாள் சிறப்பு ! உங்கள் ஓவியங்களை வகுப்பறையில் காட்சிபடுத்துமாறும், உங்கள் படைப்புகளை #NagaiInktober என்ற ஹேஷ்டேக்குடன் @NagapattinamCollector பக்கத்தை சமுகவலைதளத்தில் Tag செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவித்துள்ளனர்.
News October 28, 2025
நாகை: லாரி மோதி டிரைவர் பரிதாப பலி

வேதாரண்யம் அருகே தலைஞாயிறு திருமாளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பாரதிராஜா (40). கார் டிரைவர். இவர் நேற்று பைக்கில் நாகையில் இருந்து வேதாரண்யம் சென்று கொண்டிருந்தபோது, ரெட்டாலடி அருகே சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் பாரதிராஜா பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேளாண்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


