News October 25, 2025
இதனால் இந்தியாவிற்கு அவப்பெயர்: BCCI

<<18100854>>ஆஸி., மகளிர்<<>> கிரிக்கெட் அணியினரிடம் அத்துமீறிய சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என BCCI கண்டித்துள்ளது. இந்த சம்பவம் இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும், உடனடியாக குற்றவாளியை கைது செய்த காவல்துறைக்கு நன்றியும் தெரிவித்துள்ளது. மகளிர் ODI WC-யில் விளையாட இந்தியா வந்துள்ள ஆஸி., அணியினர் ம.பி. ஹோட்டலில் தங்கியிருந்தனர். அதில் 2 வீராங்கனைகள் காஃபி குடிக்க வந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
Similar News
News October 26, 2025
நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து 8 பேர் பரிதாபமாக பலி

நேபாளத்தில் கர்னாலி மாகாணத்தில் 18 பயணிகளை ஏற்றிச்சென்ற ஜீப் ஒன்று 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மேலும் 10 பேர் காயமடைந்தனர். அதிக வேகமே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 15 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
News October 26, 2025
பள்ளிகளுக்கு இங்கெல்லாம் நாளை விடுமுறை அறிவிப்பு

மருது பாண்டியர்களின் நினைவேந்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை(அக்.27) விடுமுறையாகும். ஏற்கெனவே, திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27 அன்று உள்ளூர் விடுமுறை என்பதால் கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது.
News October 26, 2025
அட்ரா சக்க.. இதுதான் ஜெயிலர் 2 கதையா?

ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் உருவாகிவரும் ஜெயிலர் 2-வின் கதை Synopsis ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. வர்மனை கொன்ற பிறகு, மேலும் சிலை கடத்தலில் ஈடுபடுபவர்களை தேடி தேடி முத்துவேல் பாண்டியன் எப்படி வேட்டையாடுகிறார் என்பதே ஜெயிலர் 2 என்கின்றனர். முதல் பார்ட்டை விடவும் இதில் Violence அதிகமாக இருந்த போதிலும், ரஜினி ‘அதுக்கெல்லாம் கவலைப்பட வேணாம், படம் நல்லா வந்தா போதும்’ என கூறிவிட்டாராம்.


