News October 25, 2025

Oxygen உண்மையில் எங்கிருந்து கிடைக்கிறது?

image

நாம் சுவாசிக்கும் 50% ஆக்சிஜன் கடலில் இருந்து கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடலில் உள்ள பிளாங்க்டன் எனப்படும் சிறிய தாவரங்கள், சைனோபாக்டீரியா, ஆல்கி மற்றும் சில பாக்டீரியாக்கள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தியாகிறது. இதைதான் கடலில் வாழும் உயிரினங்களும் சுவாசிக்கின்றன. நிறைய பேர் மரத்திலிருந்து மட்டுமே ஆக்சிஜன் கிடைப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறனர். அனைவரும் இத்தகவலை தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

Similar News

News February 4, 2026

இதை நினைத்தால் கவலையாக இருக்கு: தோனி

image

இந்திய டி20 அணியை மிகவும் அபாயகரமான அணி என தோனி தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு தேவையான அனுபவம், கடினமான சூழலுக்கு ஏற்ப விளையாடும் திறன் என அனைத்தும் இந்திய வீரர்களுக்கு உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால், பனிப்பொழிவின் தாக்கத்தினால் போட்டிகளின் முடிவுகள் மாறுவதாக குறிப்பிட்ட அவர், அதுமட்டுமே தனக்கு கவலை தரக்கூடிய விஷயம் என பேசியுள்ளார்.

News February 4, 2026

பிரபல இசையமைப்பாளர் காலமானார்

image

காஞ்சிபுரம் வட்டாரத்தில், மேடை மெல்லிசை நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் கார்த்திக் குணா உடல்நலக்குறைவால் காலமானார். கீபோர்ட் வாசிப்பதில் கைதேர்ந்த இவர் காஞ்சிபுரம் பற்றி இசையமைத்த பாடல் SM-ல் வைரலாகி இருந்தது. சில தமிழ் குறும்படங்களுக்கும் இவர் இசையமைத்திருக்கிறார். கார்த்திக் குணாவின் மறைவிற்கு இசைத்துறையை சேர்ந்த பலரும், அவரது ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News February 4, 2026

பிப்ரவரி 4: வரலாற்றில் இன்று

image

உலகப் புற்றுநோய் நாள் *1747–தமிழறிஞர் வீரமாமுனிவர் நினைவு நாள் *1895–நாடக நடிகர் பி.ஏ.சுப்பையா பிள்ளை பிறந்தநாள் *1943–பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் பிறந்தநாள் *1974–இயற்பியலாளார் சத்தியேந்திர நாத் போஸ் நினைவு நாள் *1985–பதிப்பாசிரியர் மே.வீ.வேணுகோபாலன் நினைவு நாள் *2004–பேஸ்புக் தொடங்கப்பட்ட நாள் *2023–பாடகி வாணி ஜெயராம் நினைவு நாள்

error: Content is protected !!