News October 25, 2025
நாகை: 72,736 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!

நாகை மாவட்டத்தில், 2025 குறுவைப் பருவத்தில் இதுவரை 72,736 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 20 மடங்கு அதிகம். இதுவரை 14,600 விவசாயிகளுக்கு ரூ. 175.99 கோடி தொகை வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக 124 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 28, 2025
நாகையில் இப்படி ஒரு இடமா!

ராமர் இலங்கை நோக்கி செல்வதற்கு முதலில் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வழியை தேர்ந்தெடுத்ததால் இது ஆதிசேது எனப்படுகிறது. கோடியக்கரையில் ஒரு மணல் திட்டின் மீது ஏறி நின்று பார்க்கையில் இலங்கையின் பின்புற கோட்டை மட்டுமே தெரிந்துள்ளது. பின்புறமாக செல்வது தவறு என எண்ணி ராமேஸ்வரம் வழியாக சென்றதாக கூறப்படுகிறது. அவர் நின்ற இடத்தில் விஜயநகர மன்னர்கள் 1480-ம் ஆண்டு ராமர் பாத கோயிலை கட்டினர். ஷேர் பண்ணுங்க
News October 28, 2025
குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 1186 மனுக்கள்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ப. ஆகாஸ் தலைமையில் நேற்று (அக்.27) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் வங்கி கடன், உதவி தொகை, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு மற்றும் கல்வி உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1186 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
News October 27, 2025
குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 1186 மனுக்கள்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ப. ஆகாஸ் தலைமையில் இன்று (அக்.27) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் வங்கி கடன், உதவி தொகை, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு மற்றும் கல்வி உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1186 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.


