News October 25, 2025
Fixed Deposit-க்கு அதிக வட்டி தரும் வங்கிகள்

பல்வேறு வகையான முதலீடுகளுக்கு நடுவில், Fixed Deposit (FD) மக்களிடம் நல்ல வரவேற்பில் உள்ளது. குறிப்பிட்ட தொகையை வங்கிகளில் 10 ஆண்டுகள் வரை FD-ல் முதலீடு செய்யலாம்.
*Suryoday Small Finance Bank – 5 ஆண்டிற்கு 5.20%
*ஜன சிறு நிதி வங்கி – 5 ஆண்டிற்கு 8%
*ஸ்லைஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் – 18 மாதத்திற்கு 7.75%
*பந்தன் வங்கி – 2 – 3 ஆண்டிற்கு 7.20%
*ICICI, HDFC வங்கிகள் – 5 ஆண்டிற்கு 6.60%
Similar News
News October 26, 2025
சிறகு விரித்து பறக்கும் துஷாரா விஜயன்

தனித்துவமான நடிப்பால் பலரையும் தன்வசப்படுத்தியர் நடிகை துஷாரா விஜயன். சார்பட்டா பரம்பரையில் தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டி தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகையாக மாறினார். படங்களில் மட்டுமல்லாமல் சோஷியல் மீடியாவில் ரசிகர்களை கவர போட்டோஸை பகிர்வது அவரது வழக்கம். அப்படி பட்டாம் பூச்சி போல் பல வண்ணங்களில் மின்னும் ஆடையுடன், அவர் பகிர்ந்த போட்டோஸுக்கு லைக்கள் பறக்கின்றன. மேலே SWIPE செய்து பாருங்கள்.
News October 26, 2025
திமுகவின் கவுன்ட் டவுன் ஸ்டாட் ஆகிவிட்டது: நயினார்

உங்களுடன் ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று மட்டும் சொல்லும் திமுக, மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களை நிறைவேற்றவில்லை என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என அரியலூரில் பரப்புரை செய்த அவர், ஸ்டாலின் ஆட்சியின் கவுன்ட் டவுன் ஸ்டாட் ஆகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 26, 2025
ஹாஸ்பிடல் அலட்சியத்தால் 5 குழந்தைகளுக்கு HIV தொற்று

ஜார்கண்டில் அரசு ஹாஸ்பிடலின் அலட்சியத்தால் 5 குழந்தைகளுக்கு HIV நோய் தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரத்தம் ஏற்றும்போது இந்த தவறு நடந்துள்ளதை, விசாரணையில் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். மேலும், ரத்த வங்கியில் நடத்தப்பட்ட ஆய்வில் அங்கு ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்ததது கண்டறியப்பட்டுள்ளது.


