News October 25, 2025
ராம்நாடு: மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சட்ட ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
Similar News
News October 28, 2025
ராம்நாடு: இனி மின் கட்டணம் தொல்லை இல்லை., இத பன்னுங்க

ராம்நாடு மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <
News October 28, 2025
ராம்நாடு: மதுபோதையில் விபத்து., நூலிழையில் தப்பித்த நபர்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கேம்ப் பூந்தோண்டி காளியம்மன் கோவில் அருகே நேற்று அக்.27 இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் அதிவேகமாக வந்த இளைஞர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு கால் இரண்டாக முறிந்தது. மேலும் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News October 28, 2025
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (அக்.27) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.


