News October 25, 2025
தூத்துக்குடி: போஸ்ட் ஆபீஸ் வங்கி வேலை அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ஊதியமாக ரூ.30,000 வழங்கப்படும் நிலையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்த 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் <
Similar News
News October 28, 2025
தூத்துக்குடி நாளை (29) பி எஸ் என் எல் குறைதீர்க்கும் முகாம்

மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்கும் முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட பி எஸ் என் எல் வாடிக்கையாளர்களின் குறைதீர்க்கும் நாள் முகாம் நாளை (29) தூத்துக்குடி பிஎஸ்என்எல் அலுவலக சேவை மையத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News October 28, 2025
தூத்துக்குடி: ரயின் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

கோவில்பட்டி நடராஜபுரம் அருகே நேற்று காலை சரக்கு ரயில் ஒன்று தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கள்ள சுடுகாடு அருகே நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென அந்த ரெயில் முன்பு பாய்ந்துள்ளார். இதில் அவர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் இளைஞர் உடலை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.
News October 28, 2025
தூத்துக்குடி: இன்று இந்த பகுதிகளில் மின் தடை

தூத்துக்குடி மக்களே, கோவில்பட்டி, வெம்பூர், சாத்தான்குளம், நாகலாபுரம், முத்தையாபுரம் ஆகிய மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (அக் 28) காலை 8 மணி முதல் 4 மணி வரையும், சில பகுதிகளில் 9 மணி முதல் 4 மணி வரையும் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. ஆகையால் தங்களது அன்றாட பணிகளில் முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுகிறது. மேலும் அறிய <


