News October 25, 2025
JUST IN: மேட்டூர் தொழிற்சாலையில் வெடி விபத்து!

மேட்டூர் அருகே கருமலைக்கூடல் பகுதியில் ரசாயனங்கள் மற்றும் உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று பாய்லர் வெடித்து சிதறியது. இதில், பணியில் இருந்த வட மாநில தொழிலாளர்களான ராகேஷ், சல்மான் ஆகிய 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.மேலும், பலர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உயிர் சேதங்கள் எதுவும் நிகழவில்லை என கூறப்படுகிறது.
Similar News
News October 26, 2025
வார்டு அளவிலான சிறப்பு கூட்டங்கள் – ஆட்சியர் அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தில் உள்ள 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் என அனைத்து வார்டுகளிலும் வார்டு அளவிலான சிறப்பு கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த கூட்டங்கள் அந்தந்த வார்டு பகுதிகளில் வருகின்ற அக். 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் காலை 11.00 மணிக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.
News October 26, 2025
சேலத்தில் 12 மருத்துவ முகாம்கள்: 17,593 பேர் பலன்

சேலம் மாவட்டத்தில் இதுவரை தமிழக அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்கள் 12 நடத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, 7,944 ஆண்கள், 10,410 பெண்கள் என மொத்தம் 17,593 பயனாளிகள் கலந்து கொண்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் இலவச பரிசோதனையுடன் மருந்து பொருட்களும் வழங்கப்பட்டன.
News October 26, 2025
காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ள தவமணி மீதும், எஸ்.ஐ. வீரக்குமார் மற்றும் ஏட்டு செல்லக்கண்ணு மீதும் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து, புகார்கள் குறித்து கமிஷனர் விசாரித்ததன் அடிப்படையில், மூன்று பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் காவலர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


