News October 25, 2025
காஸா ஒப்பந்தம்: டிரம்ப்புக்கு இந்தியா நன்றி

காஸாவில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக UN பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. எகிப்து மற்றும் கத்தார் நாடுகளுக்கும் பாராட்டு தெரிவித்த நிலையில், இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உறுதியளித்தது.
Similar News
News February 8, 2026
வங்கதேச இந்து தலைவர் சந்திர சென் காலமானார்

வங்கதேச இந்துத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரமேஷ் சந்திர சென்(86), சிறையில் உயிரிழந்துள்ளார். பிப்.12-ம் தேதி வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், உதவும் குணம் மற்றும் தூய்மையான அரசியல் வாழ்க்கைக்கு பெயர் பெற்ற சென்னின் மரணம், காவலில் உள்ள மூத்த அவாமி லீக் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் நடத்தப்படும் விதம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
News February 8, 2026
விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை; பியூஷ் கோயல்

இந்தியாவின் பல்வேறு விவசாய பொருள்களுக்கு அமெரிக்கவில் வரி விதிப்பு பூஜ்ஜியமாக இருக்கும் என பியூஷ் கோயல் விளக்கமளித்துள்ளார். அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட பொருள்களை இந்தியா அனுமதிக்கவில்லை என்றும், அமெரிக்க அரிசி, கோதுமை, சர்க்கரை, தினை, பால் பொருள்களுக்கு வரிவிலக்கு இல்லை எனவும் கூறிய அவர், அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தில் விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.
News February 8, 2026
ஊழல் குறித்து பேச விஜய்க்கு தகுதியில்லை: கி.வீரமணி

வருமானத்தை மறைத்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ள விஜய், ஊழல் குறித்து பேச எந்த தகுதியும் இல்லை என்று கி.வீரமணி விமர்சித்துள்ளார். எந்த ஒரு கொள்கையும் இல்லாமல் விஜய் ஷூட்டிங் நடத்தி வருவதாகவும், விஜய் முதலில் முழுமையாக அரசியலுக்கு வந்த பிறகு அவரை பற்றி பேசலாம் எனவும் கூறிய அவர், அதிமுக கூட்டணி வளமான கூட்டணியாக இருக்கலாமே தவிர, வலிமையான கூட்டணி கிடையாது என்றார்.


