News October 25, 2025
‘ரத்தக் கையெழுத்து’ இயக்கத்தை தொடங்கிய ஆர்.பி.உதயகுமார்

இன்று மதுரை திருமங்கலத்தில் வருகிற அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ‘ரத்தக் கையெழுத்து’ இயக்கத்தை தொடங்கியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். இதில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Similar News
News February 3, 2026
மதுரை: கணவன் & மாமியார் கொடுமையால் பெண் தீக்குளிப்பு

மேலூர், நரசிங்கம்பட்டியை சேர்ந்த விவேக் மோகனின் மனைவி தனலட்சுமி(27), தனது கணவர் வீட்டு லோன் இருப்பதாக கூறியதை தொடர்ந்து தான் அணிந்திருந்த 52 பவுன் நகை, ரூ.2.5 லட்சம் பணத்தை தந்துள்ளார். இதை திருப்பி கேட்ட போது கணவர் & மாமியார் கலைச்செல்வி(55) சேர்ந்து இவரை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் உடலில் தீ வைத்து கொண்ட தனலட்சுமி உயிரைக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.
News February 3, 2026
மதுரை: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

மதுரை மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News February 3, 2026
மதுரையில் 16 பவுன் நகை கொள்ளை

மதுரை கூடல்புதூர் ராம் முனிநகர் ரயில் தண்டவாளம் பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் உரிமையாளர்கள் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தனர். இதனை கண்காணித்த மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அதில் ஒரு வீட்டில் 8 பவுன், மற்றொரு வீட்டில் 8 1/2 பவுன் என மொத்தம் 16 1/2 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


