News October 25, 2025

சேத்தியாத்தோப்பு: 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

image

சேத்தியாத்தோப்பு அடுத்த கீழ்வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி (39). இவர் மீது சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் கடந்த 2014-ம் ஆண்டு சிறுமியை கடத்திய வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது கணபதி திடீரென தலைமறைவாகி விட்டார். இதையடுத்து கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. தொடர்ந்து கடந்த 11 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று கணபதி போலீசில் சிக்கினார்.

Similar News

News October 26, 2025

கடலூர்: ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (அக்டோபர் 25) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 25, 2025

கடலூர்: அருங்காட்சியகம் கட்டும் பணியை ஆட்சியர் ஆய்வு

image

நகராட்சி நிருவாகத்துறை இயக்குநர் மதுசூதன் ரெட்டி, கடலூர், மஞ்சக்குப்பம் சுப்பராயலு பூங்கா அருகே மீன் அருங்காட்சியகம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை இன்று (25.10.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநகராட்சி ஆணையாளர் முஜிபூர் ரஹ்மான் உட்பட பலர் உள்ளனர்.

News October 25, 2025

கடலூர்: ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

கடலூர், 12 ஆம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு தேர்வு தேர்ச்சி தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் தலைமையாசிரியர்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் இன்று (25.10.2025) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.எல்லப்பன் உட்பட பள்ளிக் கல்வித் துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!