News October 25, 2025
இந்தியாவின் மிக பணக்கார ஸ்கூல்கள் இவைதான்!

கல்வியும், மருத்துவமும் நாட்டில் இலவசம் என்றாலும், குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த பெற்றோர்கள் பெரும் பணத்தை செலவு செய்கின்றனர். அந்த வகையில், 2025 – 26 ஆண்டு கல்வி கட்டணத்தின் அடிப்படையில் நாட்டில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஸ்கூல்களின் பட்டியலை மேலே கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என அறிய போட்டோவை வலது பக்கமாக Swipe பண்ணி பாருங்க.
Similar News
News January 19, 2026
₹500 நோட்டுகளுக்கு மத்திய அரசு தடையா? FACT CHECK

அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி மக்களை குழப்பி வருகிறது. கருப்புப் பணப் புழக்கத்தை தடுக்கும் வகையில் ₹500 நோட்டுகளை மத்திய அரசு தடை செய்யவுள்ளதாக ஒரு செய்தி பரவலாக பரப்பப்படுகிறது. ‘இது உண்மையல்ல, தவறான தகவல். மக்கள் இதை நம்ப வேண்டாம்’ என்று மத்திய தகவல் சரிபார்ப்பகம் (PIB FactCheck) விளக்கம் அளித்துள்ளதுடன், அப்படி ஒரு திட்டம் அரசிடம் இல்லையென்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
News January 19, 2026
நான் கேட்டேன்… EPS செஞ்சிட்டாரு: கஞ்சா கருப்பு

பெண்களுக்கு இலவச பஸ் போல, ஆண்களுக்கும் விடனும் என கேட்டிருந்தேன். அதை EPS அறிவித்துவிட்டார் என நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார். வேங்கை படத்தில், மாலை 6 மணிக்கு மேல் ஆண்களுக்கு ஃப்ரீ பஸ் விடுங்க, நாங்க பாட்டுக்கு குடிச்சிபுட்டு அதில் ஏறி வீட்டுக்கு போயிடுவோம் என கூறினேன். அதை தான் EPS அறிவித்துள்ளார் என்றும், அதேபோன்று அம்மா இலவச வீடு திட்டமும் முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.
News January 19, 2026
இனி அமைதியை பற்றி சிந்திக்க மாட்டேன்: டிரம்ப்

நார்வே தனக்கு நோபல் பரிசை கொடுக்க மறுத்துவிட்டதால் இனி அமைதியை பற்றி சிந்திக்க வேண்டிய கடமை தனக்கு இல்லை என நார்வே PM-க்கு டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார். USA-ன் நலனுக்காக உழைப்பதிலேயே தனது கவனம் இருக்கும் என்ற அவர், கிரீன்லாந்துக்கு உரிமை கோரும் ஆவணம் டென்மார்க்கிடம் இல்லை என்றார். மேலும், கிரீன்லாந்து மீது USA-ன் முழு கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே உலகம் பாதுகாப்பாக இருக்கும் என கூறியுள்ளார்.


