News October 25, 2025
தேனி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்! APPLY

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) தேனி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க
Similar News
News October 26, 2025
தேனி: ரயில்வேயில் 8,850 பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் அக்.21-ம் தேதி முதல் <
News October 26, 2025
தேனி: பூச்சியால் பறிபோன உயிர்

தேனி, ஜங்கால்பட்டி பகுதியை சேர்ந்தவர் பார்வதி (65). இவர் நேற்று முன்தினம் இரவு கால்நடைகளுக்கு தீவனம் வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது விஷ பூச்சி ஒன்று அவரது கைவிரலில் கடித்தது. அவரை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பார்வதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு (அக்25) பதிவு செய்து விசாரணை.
News October 26, 2025
தேனி: போலீஸ் ஸ்டேஷன் முன்னே கொலை மிரட்டல்

தேனி சிவாஜிநகர் ஜெயசுதா 45. இவரது மருமகன் தினேஷ்பாண்டிக்கும் மகளுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பாக தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்திருந்தனர். புகார் தொடர்பான விசாரணைக்கு வந்த ஜெயசுதாவை, மருமகன் தினேஷ்பாண்டி, அவருடன் வந்த திவ்யா, பால்பாண்டி ஆகியோர் போலீஸ் ஸ்டேஷன் முன் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். ஜெயசுதா புகாரில், தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.


