News October 25, 2025

திருச்சி: இரிடியம் விற்பதாக மோசடி- சிபிசிஐடி விசாரணை

image

திருச்சி, மருங்காபுரி அருகே உள்ள நெல்லிப்பட்டியைச் சேர்ந்த நல்லமுத்து, சியாமளா தம்பதியினர் இரிடியம் விற்பதாக கூறி மோசடி செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், சிபிசிஐடி போலீசார் நேற்று அவர்களது வீட்டில் சோதனை செய்தனர். அதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணைக்காக தம்பதியினரை சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News February 2, 2026

திருச்சி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

திருச்சி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

திருச்சி: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 2, 2026

திருச்சி மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

திருச்சி மாவட்டம் அதவத்தூர், சிறுகனூர் துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.3) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி, வாசன் நகர், குழுமணி, வயலூர், சோமரசம்பேட்டை, புலியூர், போதாவூர், சிறுகனூர், ஆவாரவள்ளி, திருப்பட்டூர், வாழையூர், குமுளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!