News October 25, 2025
நாகை: அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

நாகை மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சலகங்களில் ஆதார் திருத்த முகாம் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் நலன்கருதி விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமைகளிலும் இந்த சேவை தற்போது நடத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு நாகை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 26, 2025
நாகை: மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் நாகை பாராளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மீன் வளர்ச்சி கழகத் தலைவர், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் முக்கிய அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.

நாகை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் நாகை மாவட்டத்தில் உள்ள 27 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை, கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.