News October 25, 2025
சென்னை: எம்.பி தம்பிதுரை மருத்துவானையில் அனுமதி!

அதிமுக ராஜ்யசபா எம்.பி மற்றும் முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரை உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த சில நாட்களாக சிறு உடல் நலப் பிரச்சனைகளை சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், எந்த காரணத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
Similar News
News February 2, 2026
BREAKING: சென்னையில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளிக்குச் செல்லும் வழியில், இன்று காலை இரண்டு மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வேன் மதுரவாயல் பைபாஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, இரண்டு சிறுவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News February 2, 2026
சென்னை: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

சென்னை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 2, 2026
சென்னையில் கரண்ட் கட்

சென்னையில் நாளை (பிப்.03) காலை 9 – 2 மணிவரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டி கன்னிகாபுரம், அகஸ்தியர் தெரு, பாலாஜி அவென்யூ, வண்டிக்காரன் தெரு மற்றும் ஐடி காரிடார் டைடல் பார்க், தரமணி, கனகம், பெரியார் நகர், திருவான்மியூர், இந்திரா நகர், எம்.ஜி.ஆர். நகர், வேளச்சேரி, விஎஸ்ஐ எஸ்டேட் ஃபேஸ்-1, 100 அடி சாலை, அண்ணாநகர், சிஎஸ்ஐஆர் சாலை, ஆர்எம்இசட் மில்லினியம், கந்தன்சாவடியில் மின் தடை செய்யப்படும்.


