News October 25, 2025

செல்வராகவனுக்கு அப்படி என்ன பிரச்னையா இருக்கும்?

image

இன்னும் 6 மாதங்களில் வாழ்வின் கடினமான தருணத்தை சந்திக்கவுள்ளேன் என்று செல்வராகவன் கூறியுள்ளார். உங்கள் வாழ்வில் மறக்க முடியாத வலி என்னவென்று நேர்காணல் ஒன்றில் கேட்டதற்கு, ஏற்கெனவே தனக்கு கல்லறை கட்டி பூச்செண்டு வைத்துவிட்டதாகவும், அதை உடைத்து தற்போது வாழ்கிறேன் என்றும் அவர் கூறியது பேசுபொருளாகியுள்ளது. 2011-க்கு பிறகு அவரது படங்கள் வெற்றி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்னவா இருக்கும்?

Similar News

News January 15, 2026

நகைக் கடன் தள்ளுபடியா?… வந்தாச்சு அப்டேட்

image

தேர்தலையொட்டி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுமா என மக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2021-ல் DMK ஆட்சிக்கு வந்ததும் ₹6,000 கோடி மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் நிலுவை விவரங்களை தயார் செய்யும்படி, அதிகாரிகளுக்கு TN அரசு அறிவுறுத்தியுள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

News January 15, 2026

SC-ன் அதிரடி உத்தரவால் மம்தாவுக்கு பின்னடைவு

image

<<18797106>>IPAC<<>> சோதனையை தொடர்ந்து ED அதிகாரிகள் மீது மே.வங்க போலீசார் பதிவு செய்த FIR-களுக்கு SC இடைக்கால தடை விதித்துள்ளது. மம்தா பானர்ஜி மீது ED தொடர்ந்த <<18864222>>வழக்கு<<>> விசாரணையின் போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சோதனையின்போது எடுக்கப்பட்ட CCTV காட்சிகளை பத்திரமாக பாதுகாக்க உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மே.வங்க அரசு 3 நாள்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News January 15, 2026

பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தானா?

image

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 100 நாள்களை வெற்றிகரமாக கடந்து டாப் 4-ல் திவ்யா, அரோரா, சபரி, விக்ரம் உள்ளனர். டைட்டில் வின்னரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில் திவ்யா முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2-வது இடத்தில் சபரியும், 3-வது இடத்திற்கான போட்டியில் விக்ரம், அரோரா இடையே இழுபறி நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. யார் டைட்டில் வின்னர் ஆக வேண்டும்? கமெண்ட்ல சொல்லுங்க

error: Content is protected !!