News October 25, 2025

மத்திய குழுவின் ஆய்வு ஒத்துழைப்பு – ஆட்சியர்

image

தஞ்சாவூரில் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்துவது தொடர்பாக மத்திய குழுவின் ஆய்வு செய்ய இருந்த நிலையில், அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நேரம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், செறிவூட்டப்பட்ட அரிசி ஆலையை ஆய்வு செய்ய நாமக்கல்லுக்கு ஒரு குழுவும் கோவைக்கு ஒரு குழுவும் திருச்சியில் இருந்து புறப்பட்டுள்ளனர் நாளை முதல் டெல்டா பகுதிகளில் ஆய்வு செய்யவுள்ளனர்.

Similar News

News October 26, 2025

தஞ்சை: திமுக முன்னாள் நிர்வாகி தற்கொலை

image

தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் பாரதி நகரைச் சேர்ந்தவர் விமல் சங்கர் (42). இவர் பேராவூரணி வடக்கு ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஆவார். இவர் மின்னணு சாதனங்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் வேலைகளையும் செய்து வந்துள்ளார். மேலும், கடன் தொல்லை காரணமாக அவர் நீண்ட நாட்கள் மன உளைச்சலில் இருந்த நிலையில், நேற்று அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

News October 26, 2025

தஞ்சை: அனைத்து டிபிசிகளுக்கும் விடுமுறை ரத்து!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாலும் – ஏற்கனவே நெல்லை கொண்டு வந்து விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் காத்திருப்பதாலும் இன்று (அக்.26) ஞாயிற்றுக்கிழமை அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் விடுமுறையின்றி செயல்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

News October 26, 2025

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் நியமனம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!