News October 25, 2025
கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் (அக்.27) மதியம் 3 மணிக்கு, சமையல் எரிவாயு விநியோக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் எரிவாயு முகவர்கள் பங்கேற்கின்றனர். ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
Similar News
News October 26, 2025
ராமநாதபுரத்தில் 10 நாளில் 124 பேர் பாதிப்பு

ராமநாதபுரம் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதுஇவ்வாறு தேங்கியுள்ள மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அர்ஜூன் கூறுகையில், ராமநாதபுரத்தில் கடந்த 10 நாட்களில் 124 பேர் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News October 25, 2025
ராம்நாடு: மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சட்ட ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
News October 25, 2025
பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி (அக்-27) புயலாக மாற வாய்ப்புள்ளது. இதற்கு மோன்தா புயல் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தற்போது பாம்பன் கடல்சார் வாரிய துறைமுக அலுவலகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு தொலைதூர புயல் எச்சரிக்கையானது மீனவர்களுக்கு விடப்பட்டுள்ளது.


