News October 25, 2025

தாம்பரம்: நிறுத்தப்பட்ட 6 ரயில் சேவை தொடக்கம்

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 6 மின்சார ரயில்களின் சேவை கடந்த ஜூன் மாதத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததால் நிறுத்தப்பட்ட ரயில் சேவை நாளை முதல் இயங்குமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் – கடற்கரை காலை 11:00, கடற்கரை – தாம்பரம் பகல் 11:52, 12:02, 12:15, செங்கை – கு.பூண்டி காலை 9:50, கடற்கரை – செங்கை பகல் 12:28.

Similar News

News February 1, 2026

வண்டலூர் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலி

image

பொத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் செங்கல்பட்டு கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்றுள்ளார். அப்போது முன்னாள் சென்ற கார் மீது மோதி தமிழரசன் படுகாயம் அடைத்தார். குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 1, 2026

மாமல்லபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசயம்!

image

மாமல்லபுரம் கடற்கரையில் மண்ணில் புதைந்திருந்த பல்லவர் கால பாறை ஒன்று கடல் அரிப்பால் வெளிப்பட்டுள்ளது. படிக்கட்டுகள் போன்ற அமைப்புடன் காணப்படும் இந்த பாறை, பழங்கால கட்டுமானத்தின் சுவடாக கருதப்படுகிறது. பல்லவர் ஆட்சியில் கடற்கரையில் பல கோயில்கள் இருந்ததாக கூறப்படும் நிலையில், இது குளம் அல்லது கட்டிடப் பகுதி இருக்கலாம் என கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஜெ. ராஜேந்திரன் தெரிவித்தார்.

News February 1, 2026

செங்கை: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!