News October 25, 2025

CM வேட்பாளர் நிதிஷ்குமார்: அறிவித்தார் மோடி

image

பிஹார் சட்டசபை தேர்தலில் INDIA கூட்டணி தேஜஸ்வி யாதவை CM வேட்பாளராக அறிவித்தது. தொடர்ந்து, NDA கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசியுள்ளார் PM மோடி. நேற்று பிஹாரில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நிதிஷ்குமார் தலைமையில் NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைக்கும் என்று கூறியுள்ளார்.

Similar News

News February 5, 2026

PM மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி: ஓம் பிர்லா

image

PM மோடியை பார்லிமெண்ட்டுக்கு வரவேண்டாம் என்று தான்தான் சொன்னேன் என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். PM மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்திருப்பதால் அப்படி சொன்னதாக அவர் கூறியுள்ளார். சீன ஆக்கிரமிப்பு, அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல பயந்து PM மோடி அவைக்கு வரவில்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News February 5, 2026

அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்தது

image

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது. சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் EPS-ஐ அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆதரவைத் தெரிவித்தனர். EPS அருமையான தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருப்பதாகவும், தேர்தலில் வென்று அவர் முதல்வராக பதவியேற்பார் என்றும் கதிரவன் தெரிவித்துள்ளார்.

News February 5, 2026

டிகிரி போதும்.. வங்கியில் ₹48,480 சம்பளம்!

image

தமிழகம் & பாண்டிச்சேரியில் SBI வங்கியில் 165 Circle Based Officers பணியிடங்கள் நிரப்படவுள்ளன *வயது: 21- 30 *கல்வித்தகுதி: Engineering, Medicine, Cost accounting, Chartered accounting *தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் & உள்ளூர் மொழித் திறன் தேர்வு *பிப். 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *சம்பளம்: ₹48,480 *ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் செய்யவும். SHARE IT.

error: Content is protected !!