News October 25, 2025
ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி வழங்குக

பள்ளி ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக CM ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால், இதுகுறித்து ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வார் என்றும் விரைவில் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News October 26, 2025
11 வட்டாட்சியர்கள் பணியிடை மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வட்டாட்சியர்களை அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் பாலகுரு உளுந்தூர்பேட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன் கள்ளக்குறிச்சி வன நிர்ணய அலுவலராக என மொத்தம் 11 வட்டாட்சியர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News October 26, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News October 26, 2025
லிட்டில் மாஸ்டரை நெருங்கும் கிங் கோலி

ODI-ல் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ODI போட்டியில் 74 ரன்கள் விளாசிய அவர், 380 இன்னிங்ஸில் 14,234 ரன்கள் எடுத்த சங்ககாராவை விட ஒரு ரன் அதிகமாக எடுத்துள்ளார். இச்சாதனையை 293 இன்னிங்ஸிலேயே கோலி படைத்துள்ளார். 452 இன்னிங்ஸில் 18,426 ரன்கள் எடுத்து சச்சின் முதல் இடத்தில் தொடர்கிறார்.


