News October 25, 2025
BREAKING: இந்தியா பவுலிங்

சிட்னியில் நடக்கும் 3-வது ODI-ல் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தொடரை இழந்துவிட்ட இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்திய அணி: கில்(C), ரோஹித், கோலி, ஷ்ரேயஸ் ஐயர், KL ராகுல், அக்சர் படேல், சுந்தர், பிரசித் கிருஷ்ணா, ராணா, குல்தீப், சிராஜ். இன்று வெற்றி பெறுமா இந்தியா?
Similar News
News January 15, 2026
ஈரானின் எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் பதற்றம்

மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதனால், அமெரிக்கா தனது ராணுவப் படைகளை கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமானத் தளத்திலிருந்து திரும்ப பெற்றுள்ளது. அல் உதெய்த், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளமாகும்.
News January 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 15, 2026
மும்பையை கைப்பற்ற போராடுவது இதனால்தான்!

நாட்டின் நிதி தலைநகரமான மும்பையில் இன்று நகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்நகரத்தின் 2025-26 பட்ஜெட் ₹74,427 கோடியாகும். இது கோவா (₹28,162 கோடி), அருணாச்சல் பிரதேசம் (₹39,842 கோடி), ஹிமாச்சல் (₹58,514 கோடி), சிக்கிம் (₹31,412 கோடி) ஆகிய 4 மாநிலங்களின் மொத்த பட்ஜெட்டை விட அதிகமாகும். அதனால் தான், மும்பை நகராட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றன.


