News October 25, 2025

மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள்

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள இரண்டு மத்திய கருவிகளுக்கான மையத்தில் தொழில்நுட்ப உதவியாளர்கள் இரண்டு பேரும் திட்ட உதவியாளர்களும் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கல்வித் தகுதி மற்றும் விவரங்களுடன் இணையத்தில் வெளியிட்டுள்ள சான்றுகளுடன் வருகின்ற 29ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். ஷேர்!

Similar News

News October 26, 2025

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற நெல்லை வீராங்கனை

image

பஹ்ரைன்‌ நாட்டில் நடைபெற்று வரும் 3வது‌ இளையோர் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது, இந்த போட்டியில் நமது‌ திருநெல்வேலி மாவட்டம் நாரணமாள்புரம் பகுதியைச் சேர்ந்த வீராங்கனை எட்வினா‌ ஜெய்சன் 400மீ போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரின் இந்த சாதனை இளைஞர்கள் மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

News October 25, 2025

சாகித்திய அகாடமி விருது பெற்ற நெல்லை கல்லூரி பேராசிரியை

image

நெல்லை கல்லூரி பேராசிரியை விமலா மலையாள நூலான “என்டே ஆணுங்கள்” என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்தார். இதற்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விருதை கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற விழாவில் அகாடமி தலைவர் மாதவ. கௌஷிக் வழங்கி பாராட்டினர். விருதுடன் ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பணம் செப்பு பட்டையமும் வழங்கப்பட்டது. இதற்காக இவரை நெல்லை பேராசிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.

News October 25, 2025

நெல்லை: மழைக் காலத்தில் மின் பிரச்சனையா? இதோ தீர்வு

image

நெல்லை மக்களே, மழைக் காலத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் Whatsapp மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!