News October 25, 2025
கள்ளக்குறிச்சி மக்களின் எதிர்பார்ப்பு…

சின்னசேலம், பகண்டைகூட்ரோடு, கல்வராயன்மலை ஆகிய 3 பி.டி.ஓ., அலுவலகத்தில் ஆதார் சேவை மையத்திற்கான அனைத்து உபகரண பொருட்கள் இருந்தும், பணி துவங்கப்படாமல் உள்ளது. இதனால், தினமும் 100கும் மேற்பட்டோர் ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொள்வதற்காக ,நீண்ட வரிசையில் நிற்கின்றனர். எனவே சுற்றியுள்ள அலுவலகத்தில் ஆதார் சேவை மையங்கள் திறக்கப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News October 25, 2025
நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு கூட்டம்

மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அந்தந்த வார்டு உறுப்பினர் தலைமையில் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அந்தந்த வார்டு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களை குறைகளை தெரிவிக்கலாம். இதில் மூன்று கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளனர்.
News October 25, 2025
கால்நடைகளை பாதுகாத்திட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

மழையில் ஆடுகளை வெளியில் மேச்சலுக்கு ஓட்டிச் செல்வதை தவிர்க்க வேண்டும். ஆட்டு பண்ணையாளர்கள் ஆட்டுக் கொள்ளை நோய்க்கான தடுப்பூசியை அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகி அளிக்கலாம்.
நோயுற்ற கால்நடைகளுக்கு மருத்துவரை அணுகி பயன்பெறலாம். கால்நடை வளர்ப்போர் உரிய வழிமுறைகளை பின்பற்றி மழையில் இருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News October 25, 2025
கள்ளக்குறிச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை.<


