News October 25, 2025
பாஜக அபார வெற்றி

ஜம்மு காஷ்மீர் ராஜ்யசபா தேர்தலில், ஒரு இடத்தில் பாஜக வேட்பாளர் சத் பால் சர்மா சர்ப்ரைஸாக அபார வெற்றி பெற்றுள்ளார். அதுவும், சட்டமன்றத்தில் பாஜகவிற்கு இருக்கும் பலத்தை விட 4 வாக்குகள் கூடுதலாக பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார். NC வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, பாஜகவிற்கு வாக்களித்து வெற்றிபெற செய்துள்ளனர். வாக்களித்தது ஆளும் கட்சியினரா, மாற்றுக்கட்சி MLAக்களா என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது.
Similar News
News October 25, 2025
இந்தியா Vs பாக்.: எல்லையில் இரு ராணுவங்களும் பயிற்சி

பாக்., எல்லை அருகே சர் கிரீக் பகுதியில் வரும் 30-ம் தேதி முதல் நவ.10 வரை முப்படைகள் பயிற்சி நடத்த உள்ளன. சர் கிரீக் பகுதியில் பாக்., ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்துவதாக கூறப்படும் நிலையில், இந்தியா பயிற்சி மேற்கொள்ள உள்ளது. ஆனால், அதற்கு முன்பாக வரும் 28, 29-ம் தேதிகளில் பாக்., தனது வான்வெளியில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், அந்நாடு பயிற்சி (அ) ஆயுத சோதனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 25, 2025
BREAKING: கனமழை.. அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு

புயல் உருவாவதன் எதிரொலியாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மருந்து பொருள்களை கையிருப்பில் வைக்க அனைத்து மாவட்ட ஹாஸ்பிடல்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பாரசிட்டமால், குளுக்கோஸ், உப்பு கரைசல் உள்ளிட்டவை தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காய்ச்சல் அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
News October 25, 2025
தொடரை இழந்தாலும் இந்தியா தான் நம்பர் 1: மிட்செல் மார்ஷ்

நாங்கள் தொடரை வென்றாலும் இந்தியாதான் உலகின் நம்பர் 1 அணி என ஆஸி., கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மாவும், கோலியும் கடந்த 10 ஆண்டுகளாக எதிர் அணிகளை எவ்வாறு வீழ்த்தி இருக்கிறார்கள் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இந்திய அணியின் செயல்பாடுகளில் இருந்து எங்களுடைய இளம் வீரர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


