News April 18, 2024

ராக்கெட் எஞ்சினில் இலகு ரக கருவியை உருவாக்கிய இஸ்ரோ!

image

ராக்கெட் எஞ்சினில் உந்துவிசைக்கு பயன்படுத்தப்படும் கட்டமைப்பை நாசிலை (Nozzle) மிகவும் இலகுவான எடையில் இஸ்ரோ உருவாக்கியுள்ளது. கொலம்பியம் அலாய் மூலக்கூறால் ஆன நாசில்களுக்கு மாற்றாக சி-சி மூலக்கூறு நுட்பத்தில் இயங்கும் எஞ்சின் மூலம் பிஎஸ் 4 நிலையில் எரிசக்தி ஆற்றல் திறன் மேம்படுவதுடன் எடையும் 67% குறையும். கூடுதலாக 15 கிலோ கொண்ட ஆய்வுக் கருவிகளை PS-4 நிலையின் மூலம் விண்ணுக்கு செலுத்த முடியும்.

Similar News

News November 15, 2025

இந்திய மார்க்கெட்டில் இந்த போன் தான் ராஜா!

image

இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் ஐபோன் தான் ஆதிக்கம் செலுத்துகிறது என நீங்கள் நினைத்தால், அது தவறு. நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வாழும் இந்தியாவில், பட்ஜெட் விலையில் கிடைக்கும் போன்கள் தான் மார்க்கெட்டின் ராஜாவாக உள்ளன. அப்படி இந்தியர்களை அதிகளவில் கவர்ந்த டாப் 8 இடத்தில் உள்ள போன்களின் லிஸ்டை கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். நீங்க என்ன போன் யூஸ் பண்றீங்க?

News November 15, 2025

BREAKING: அதிமுகவுடன் கூட்டணி… அறிவித்தார்

image

2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைவதாக ஃபார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, ஃபார்வர்டு பிளாக் கட்சியின் கதிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள், EPS-ஐ நேரில் சந்தித்தனர். அப்போது, EPS-க்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

News November 15, 2025

உங்கள் கடா பல்லில் ஒளிந்திருக்கும் அதிசயம்!

image

உங்களுக்குத் தெரியுமா? சொத்தை ஏற்பட்டால் சாதாரணமாக அகற்றும் கடவாய் பற்களின் உள்ளே ஒரு பொக்கிஷம் ஒளிந்துள்ளது. கடா பல்லின் திசுவில் இருக்கும் அதிசய ஸ்டெம் செல்கள், எதிர்காலத்தில் இதய நோய் அல்லது மூளையில் ஏற்படும் காயங்கள் போன்ற தீவிரப் பிரச்னைகளைச் சரிசெய்ய உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதை நடைமுறைக்கு கொண்டுவர இன்னும் பல ஆராய்ச்சிகள் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. SHARE.

error: Content is protected !!