News October 25, 2025
திருச்சி: வாலிபர் எடுத்த விபரீத முடிவு

துவாக்குடி அருகே அசூர் பகுதியில் வாலிபர் ஒருவர் நேற்று மரக்கிளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 31, 2026
திருச்சி: ராணுவத்தில் வேலை- APPLY NOW

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 31, 2026
திருச்சி: தைப்பூசம் சிறப்பு ரயில் அறிவிப்பு

தைப்பூசத்தை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு அதிவிரைவு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது நாளை (ஜன.31) இரவு 11:50 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, திருச்சி வழியாக நாளை மறுதினம் (பிப்.1) காலை 11 மணியளவில் தூத்துக்குடி சென்றடையும். பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்த்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News January 31, 2026
திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் தனியார் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெல்ட் டைப் இயந்திரத்திற்கு 1 மணி நேரத்திற்கு ரூ.2600 எனவும், டயர் டைப் இயந்திரத்திற்கு 1 மணி நேரத்துக்கு ரூ.1800 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டால், வட்டாட்சியர்கள், வேளாண் அலுவலர்களிடம் புகாரளிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


