News October 25, 2025
கடலூர்: வீட்டில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

விருத்தாசலம் வட்டம் கு.நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (40), என்பவர் வீட்டில் 3 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டதாக தெரிகிறது. வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் போலீசார் வீட்டை சோதனை செய்தபோது, சுரேஷின் உடல் அழுகிய நிலையில் நேற்று (அக்.24) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 25, 2025
கடலூர்: வெள்ளப்பெருக்கில் சிக்கி முதியவர் பரிதாப பலி

கடலூர் அருகே பெத்தாங்குப்பம் மேட்டு தெருவில் வசித்து வந்த மணிவேல் (60) என்பவர் நேற்று மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டார். தீயணைப்புத் துறையினர் பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலம் தேடிய நிலையில் இன்று (அக்.25) காலை பரவனாற்றில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
News October 25, 2025
கடலூர்: ரயில்வேயில் வேலை.. APPLY NOW!

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் முதல் <
News October 25, 2025
சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் தன்னார்வலராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, அலுவலகங்களில் சட்ட தன்னார்வலராக பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பத்தை 5.11.2025 மாலை 5 மணிக்குள் கடலூர் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி சுபத்ராதேவி தெரிவித்துள்ளார். https://cuddalore.dcourts.gov.in தெரிந்து கொள்ளலாம்.


