News October 25, 2025
திருபத்தூர்: வாலிபர் துடிதுடித்து பலி!

திருப்பத்தூர்: ஆம்பூர் தாலுகா செங்கலி குப்பம் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று(அக்.24) இரவு 11.30 மணிக்கு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம் பாக்கம் பாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(20). ஹோட்டல் தொழிலாளியான இவர் சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News February 1, 2026
திருப்பத்தூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திருப்பத்தூர் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 1, 2026
திருப்பத்தூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், மாவட்ட நிர்வாகத்திடமும் (04179222111), லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News February 1, 2026
திருப்பத்தூர்: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு!

திருப்பத்தூர் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க


