News October 25, 2025
ஈரோடு: தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி

ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் ஒருவர் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடமிருந்து தீபாவளி சீட்டு நடத்தி சுமார் ரூ.1 கோடி வரை மோசடி செய்துள்ளதாகவும் மற்றும் தலைமறைவு ஆகிவிட்டார் எனவும் நேற்று அப்பகுதி பொதுமக்கள் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் நேரில் வந்து புகார் மனுக்களை அளித்தனர். தங்கள் பணத்தை மீட்டு தரவும், தலைமறைவாகியுள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்கவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Similar News
News October 25, 2025
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டம் காவல்துறை இன்று (25.10.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் டயல் 100, சைபர் கிரைம் 1930 மற்றும் குழந்தைகள் உதவி 1098 என்ற எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
News October 25, 2025
ஈரோடு: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை!

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் இங்கே <
News October 25, 2025
ஈரோடு: ரூ.5 லட்சம் வரை..! மிஸ் பண்ணிடாதீங்க

ஈரோடு: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். (SHARE)


