News October 25, 2025
தஞ்சை: மர்மமான முறையில் மாணவர் இறப்பு!

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு (20). என்ஜினீயரிங் மாணவரான இவர், தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை விஷ்ணு, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார், விஷ்ணுவின் உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News October 25, 2025
விவசாயிகளை நேரில் சென்று ஆறுதல் கூறிய மாநில தலைவர்

தஞ்சாவூர் ஆலக்குடி பூதலூர் ஒன்றியம் மற்றும் நேரடி கொள்முதல் நிலையங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மூட்டைகளை, பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும் விவசாயிகளின் அரணாக என்றும் பாஜக துணை நிற்கும் உடனடியாக வீணான நெல்லுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதில் பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News October 25, 2025
தஞ்சை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Degree
3. சம்பளம்: ரூ.40,000 – 1,40,000/-
4. வயது வரம்பு: 21-25
5. கடைசி தேதி : 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!
News October 25, 2025
தஞ்சை: வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியில் இருந்து படிப்படியாக அதிகரித்து நேற்று பகலில் வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்படுகிறது. தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை சார்பில் 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


