News October 25, 2025
நெல்லை: தந்தைக்கு கத்திக்குத்து – மகன் வெறிச்செயல்

நெல்லை, மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளம் பகுதியை சேர்ந்த மகாராஜா என்பவர் நேற்று முன்தினம் திடீரென தனது தந்தை முருகனை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 26, 2025
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற நெல்லை வீராங்கனை

பஹ்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் 3வது இளையோர் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது, இந்த போட்டியில் நமது திருநெல்வேலி மாவட்டம் நாரணமாள்புரம் பகுதியைச் சேர்ந்த வீராங்கனை எட்வினா ஜெய்சன் 400மீ போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரின் இந்த சாதனை இளைஞர்கள் மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
News October 25, 2025
சாகித்திய அகாடமி விருது பெற்ற நெல்லை கல்லூரி பேராசிரியை

நெல்லை கல்லூரி பேராசிரியை விமலா மலையாள நூலான “என்டே ஆணுங்கள்” என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்தார். இதற்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விருதை கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற விழாவில் அகாடமி தலைவர் மாதவ. கௌஷிக் வழங்கி பாராட்டினர். விருதுடன் ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பணம் செப்பு பட்டையமும் வழங்கப்பட்டது. இதற்காக இவரை நெல்லை பேராசிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.
News October 25, 2025
நெல்லை: மழைக் காலத்தில் மின் பிரச்சனையா? இதோ தீர்வு

நெல்லை மக்களே, மழைக் காலத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் Whatsapp மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!


