News October 25, 2025
செங்கையில் பரவி வரும் டெங்கு ; உஷார்!

வடகிழக்கு பருவமழை தீவிரமாகும் நிலையில், செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. தினமும் 10 பேருக்கு இருந்த பாதிப்பு, தற்போது 60க்கும் மேல் பதிவாகி வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் பாதிப்பு, இரட்டிப்பாகும் என்பதால், பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Similar News
News February 16, 2026
தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எழும்பூர் – ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் ரயில் (22662/61) வரும் பிப். 20-ந்தேதி முதல் ஏப்.6-ம் தேதி வரை, தாம்பரத்திலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News February 16, 2026
செங்கல்பட்டு: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், மாவட்ட நிர்வாகத்திடமும் (04175-233333), லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News February 16, 2026
செங்கை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

செங்கல்பட்டு மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும். A – (Jan/Feb/Mar), B – (Apr/May/Jun), C – (Jul/Aug/Sep), D – (Oct/Nov/Dec), காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. அனைவரும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!


