News October 25, 2025
FLASH: உலக சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கண்ணாமூச்சி ஆடி வருகிறது. நேற்று(அக்.24) காலை வர்த்தகத்தில் ஏற்றத்தில் இருந்த தங்கம் மாலையில் சுமார் 75 டாலர்கள் (₹6,586) சரிந்தது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) 16 டாலர்கள் சரிந்து $4,113 ஆக நீடிக்கிறது. இதனால், இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் பிரதிபலிக்கும் என கூறப்படுகிறது. கடந்த 7 நாள்களில் நம்மூரில் தங்கம் விலை சவரனுக்கு ₹6,400 குறைந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 25, 2025
BREAKING: கனமழை.. அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு

புயல் உருவாவதன் எதிரொலியாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மருந்து பொருள்களை கையிருப்பில் வைக்க அனைத்து மாவட்ட ஹாஸ்பிடல்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பாரசிட்டமால், குளுக்கோஸ், உப்பு கரைசல் உள்ளிட்டவை தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காய்ச்சல் அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
News October 25, 2025
தொடரை இழந்தாலும் இந்தியா தான் நம்பர் 1: மிட்செல் மார்ஷ்

நாங்கள் தொடரை வென்றாலும் இந்தியாதான் உலகின் நம்பர் 1 அணி என ஆஸி., கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மாவும், கோலியும் கடந்த 10 ஆண்டுகளாக எதிர் அணிகளை எவ்வாறு வீழ்த்தி இருக்கிறார்கள் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இந்திய அணியின் செயல்பாடுகளில் இருந்து எங்களுடைய இளம் வீரர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
News October 25, 2025
LIC-யால் மோடியின் நண்பர்களுக்கே நன்மை: கார்கே

LIC-யால் பலனடைவது பாலிசிதாரர்கள் இல்லை, மோடியின் நண்பர்களே என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். அதானி குழுமத்தில் <<18102060>>LIC<<>> ₹33,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டிருந்ததாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மோடியின் நண்பரின் பாக்கெட்டை நிரப்ப, 30 கோடி பாலிசிதாரர்களின் பணத்தை சுரண்டுவதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


