News October 25, 2025
செங்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்!

செங்கல்பட்டு : மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தினமும் ஆட்டோவில் பள்ளிக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில், அச்சிறுமி ஒருமுறை ஆட்டோவை ஓட்டிப் பார்க்க ஆசைப்பட்டுள்ளார். அப்போது அச்சிறுமிக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக்கொடுத்த டிரைவர் பாலியல் சீண்டல் செய்ததாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார்.
Similar News
News October 26, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு (அக்டோபர்-25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 25, 2025
செங்கல்பட்டு: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News October 25, 2025
செங்கல்பட்டு காவல்துறையினரின் சைபர் க்ரைம் விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சைபர் க்ரைம் விழிப்புணர்வு
சைபர் குற்றங்கள் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோர் மிரட்டலுக்கு அஞ்சாமல் புகார் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வங்கி மேலாளர், மின்சாரக் கட்டணம், பழைய பொருட்களை ஆன்லைனில் வாங்குதல்/விற்றல் போன்ற பெயர்களில் நடைபெறும் மோசடிகள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


