News October 25, 2025
கோவையில் 2 நாள்கள்! வெளியான முக்கிய அறிவிப்பு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் (25.10.2025) மற்றும் (26.10.2025) ஆகிய 2 நாட்களிலும் வழக்கம் போல் காலை 9 முதல் மாலை 5 மணி வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) செயல்படும். எனவே, பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் முகாம் நடைபெறும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News January 28, 2026
கோவையில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

கோவை, குப்பிச்சிபாளையத்தில் புகழ்பெற்ற கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. சக்திவாய்ந்த பெருமாளை வணங்கினாள், ஜாதக ரீதியிலான தோஷங்கள் நீங்குமாம். இங்கு பச்சை பயறும், உருண்டை வெல்லமும் பெருமாளுக்கு படைத்து, பின்பு அவற்றை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கினால், தோஷங்கள் அனைத்தும் முற்றிலும் நீங்குமாம். வெள்ளிக்கிழமைகளில் மாங்கல்ய பாக்கியம் கேட்டு வரும் பெண்களுக்கு சிறப்பு பூஜையும் நடைபெறுகிறதாம். SHAREit
News January 28, 2026
கோவையில் நாளை முதல் ஜவுளி தொழில் மாநாடு

தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து நடத்தும் ஜவுனி தொழில் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நளை மற்றம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டினை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக துவக்கி வைக்கவுள்ளார். இம்மாநாட்டில் ஜவுளித் தொழிலுக்கென பிரத்யேகமாக கண்காட்சி நடைபெறவுள்ளது.
News January 28, 2026
வால்பாறை அருகே விபத்து: 25 பேர் காயம்

வால்பாறை அருகாமையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் இன்று காலை ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, எஸ்டேட் பகுதியில் இருந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டருடன் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 25 எஸ்டேட் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.


